
திருத்துறைப்பூண்டி, செப். 23: திருவாரூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் படி, திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளித்துள்ள பட்டியலில் உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கூட்டாய்வு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, வருவாய் துறை, பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு, பொதுப்பணித்துறை மின்பிரிவு, ஊரக வளர்ச்சி முகமை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் ஆகியோர் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள நெடும்பலம், கட்டிமேடு, பிச்சன்கோட்டகம், மேலமருதூர், ஆதிரெங்கம், சேகல், கொருக்கை, கொக்கலாடி, பாமணி ஊராட்சியில் தாசில்தார் கார்ல் மார்க்ஸ், ஆணையர் அன்பழகன், தீயனைப்பு நிலைய அலுவலர் சுப்பையன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
The post திருத்துறைப்பூண்டியில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் ஆய்வு appeared first on Dinakaran.