
திருவிடைமருதூர், செப். 23: திருவிடைமருதூர் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி 97 புள்ளிகள் பெற்று 2வது முறையாக ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
இப்பள்ளி மாணவன் 12ம் வகுப்பை சேர்ந்த ஏ.ஆக்னல் அருள்ராய் சீனியர் பிரிவில் தனிநபர் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் வினோத் சேவியர், உடற்கல்வி ஆசிரியர்கள் லூர்து அமல்ராஜ், டேவிட், ரமேஷ்குமார் மற்றும் அலுவலர்களை தாளாளர் அமிர்தசாமி, தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் ஆகியோர் பாராட்டினர்.
The post குறுவட்ட தடகள போட்டியில் சாம்பியன் மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.