×

தூய்மை பாரத இயக்கம் சார்பில் தூய்மையே சேவை பிரச்சார இயக்க உறுதிமொழி

 

திருமயம்,செப்.23: அரிமளம் அருகே ஊராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்கம் மூலம் அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் தமிழ்நாடு அரசும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருள்களுக்கு தடை விதித்து கண்காணித்து வருகிறது. இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள முனசந்தை ஊராட்சியில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் தூய்மையே சேவை என்ற பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிலையில் ஊராட்சிகளில் கடந்த 15ம் தேதி முதல் வரும் 2ம் தேதி வரை தொடர்ந்து இது போன்ற தூய்மை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனிடையே நடைபெற்ற நிகழ்ச்சியில் முனசந்தை ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன். தலைமை வகித்தார். இதில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு அரசு பொது கட்டிடங்கள், சுகாதார வளாகம், ஊராட்சி கட்டிடம், பொதுமக்கள் கூடும் இடங்கள், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியே பிரித்து சேகரித்தனர்.

அப்போது மக்கும், மக்காத குப்பை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முனசந்தை ஊராட்சி ஊழியர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் குப்பை இல்லா கிராமமாக மாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர், ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர், ஊராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post தூய்மை பாரத இயக்கம் சார்பில் தூய்மையே சேவை பிரச்சார இயக்க உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Swachh Ye Seva ,Swachh ,Bharat Movement ,Tirumayam ,Swachh Bharat Movement ,Panchayat ,Arimalam ,
× RELATED அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்,...