×

பொன்னமராவதி அருகே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

பொன்னமராவதி,செப்.23: பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி மற்றும் வேந்தன்பட்டி பகுதியில் டெங்கு முன் தடுப்பு பணிகள் நடந்தது. தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவின்படி வாரா வாரம் வெள்ளிக்கிழமை தோறும் டெங்கு களப்பணிகள் நடைபெறும். அந்த பகுதிகளில் தேவையின்றி தெரு ஓரங்களில் கிடக்கும் டயர்கள், வீடுகளில் பயன்பாடின்றி இருக்கும் டயர்களை அப்புறப்படுத்தல், பணி தொடர் நடவடிக்கையாக செய்திட அறிவுறுத்தல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று டெங்கு களப்பணிகள் 2ம் நாளாக மேலைச்சிவபுரி பகுதிகளில் இப்பணியானது நடைபெற்றது.

அடுத்து மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. சிறந்த முறையில் பதில்கள் கூறிய மாணவர் முருகவேலுக்கு பேனா பரிசளிக்கப்பட்டது. மேலும் வேந்தன்பட்டி ஊராட்சி, வேந்தன்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத்தின் சார்பாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக ஏடிஸ் முதிர் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி வேந்தன்பட்டியிலுள்ள அரசு அலுவலக கட்டிடங்களில் நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் உத்தமன், பிரேம்குமார் டெங்கு களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

The post பொன்னமராவதி அருகே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Upper Chivapuri ,Vendanpatti ,Tamil Nadu Government… ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...