
அரியலூர், செப்.23: அரியலூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவுப்படி, சைபர் கிரைம் கூடுதல் தலைமை இயக்குனர் சஞ்சய்குமார் அறிவுரையின் படி, காவல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் பிரிவு தேவராணி மற்றும் அரியலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின் படி பஸ் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுங்கள் வழங்கப்பட்டது.
சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி அறிவுறுத்தலின் படி, அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் சார்பாக அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வாணி மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் அரியலூர் போக்குவரத்து பணிமனை பிரிவு, கிளை மேலாளர் முன்னிலையில், அரியலூர் பணிமனையில் இருந்து இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் விழிப்புணர்வு பலகைகள் ஒட்டினர்.
போக்குவரத்து பணிமனை பிரிவில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கும் இணைய குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு செய்தும், சைபர் கிரைம் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு செய்யப்பட்டது. மேலும் 1930 உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமாக கூறப்பட்டது.
The post அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல் appeared first on Dinakaran.