×

வடக்கலூர் கிராமத்தில் வழிப்பாதை பிரச்சினையால் சாலை மறியல்

 

குன்னம், செப்.23: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வடக்கலூர் கிராமத்தில் வசித்து வருபவர் தியாகராஜன் மகன் இளையராஜா(30). இவருக்கு சொந்தமான இடத்தின் வழியாக சுமார் 8 குடும்பத்தினர் வழிப்பாதையாக உபயோகித்து வருகின்றனர். இளையராஜா தனது வீட்டை விரிவாக்கம் செய்யும்போது மேற்படி வழி பாதையை மறித்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் எட்டு குடும்பத்தில் வசிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து குன்னம் தாசில்தாரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், இது குறித்து எந்த நடவடிக்கும் இல்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த எட்டு குடும்பத்தினரும் நேற்று காலை திட்டக்குடியில் இருந்து வடக்கலூர் வழியாக பெரம்பலூர் செல்லும் பேருந்தை மறித்து பச்சமுத்து (45) என்பவர் தலைமையில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வடக்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் மங்களமேடு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post வடக்கலூர் கிராமத்தில் வழிப்பாதை பிரச்சினையால் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Vadakalur village ,Gunnam ,Thiagarajan ,Ilayaraja ,Vadakalur ,Gunnam district ,Perambalur district ,Dinakaran ,
× RELATED குன்னம் அருகே தொடர் மழையால் வீட்டு சுவர் இடிந்தது