×

ஜெயங்கொண்டத்தில் வி.சி.க., தேர்தல் முகவர்கள் பணிக்குழு ஆலோசனை கூட்டம்

 

ஜெயங்கொண்டம், செப்.23: ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் ‘சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி 2024’ விடுதலை சிறுத்தை கட்சியின் தேர்தல் முகவர்கள் பணி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு முதன்மைச் செயலாளர் பாவரசு, சிதம்பரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் விடுதலைச் செழியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வருகின்ற தேர்தலில் பணியாற்றும் முறையினையும், எழுச்சித் தமிழரை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது குறித்தும் பொறுப்பாளர்களுக்கு அறிவுரை, ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கிய தாசன் முன்னிலை வகித்தார். அரியலூர், பெரம்பலூர் மண்டல பொறுப்பாளர்கள் அன்பானந்தம், துணை செயலாளர் மாறன், கண் கொளஞ்சி, நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஜெயங்கொண்டத்தில் வி.சி.க., தேர்தல் முகவர்கள் பணிக்குழு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : V.C.C. ,Election ,Agents Working ,Committee ,Jayangonda ,Jeyangondam ,Chidambaram Parliamentary Constituency 2024 ,Jayangondam ,VCK ,Agents ,Task Force ,Meeting ,Dinakaran ,
× RELATED 5 மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு...