×

மேலகாசாகுடி கிராமத்தில் அரசுப்பள்ளியில் விநாடி – வினா போட்டி

 

காரைக்கால், செப். 23: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு அடுத்த மேலகாசாகுடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கணிதத் திறன்கள் வளர்க்கும் வகையில், விநாடி வினா போட்டி நேற்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் தலைமை வகித்தார். புதுச்சேரி அரசு பள்ளிகள் அனைத்தும் இந்த கல்வி ஆண்டிலிருந்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தை பின்பற்றுவதால், பள்ளி கணித ஆசிரியர் சுரேஷ் விநாடி-வினா போட்டி தலைவராக பங்கேற்று, மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமான வினாக்களை கேட்டு, மதிப்பெண்கள் வழங்கினார். பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியர்கள் மகேஸ்வரி, திலகா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்தினர். இறுதியாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post மேலகாசாகுடி கிராமத்தில் அரசுப்பள்ளியில் விநாடி – வினா போட்டி appeared first on Dinakaran.

Tags : Sekh - ,Vina Competition ,Malagasakudi Village ,Karicol ,Karichakal District Nedingad ,Malakasakudi Village Government School Sekonda ,Dinakaran ,
× RELATED இயற்கை ஆர்வலர்கள் முடிவு; ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும்