×

ஆர்.கே.பேட்டை அருகே தேசிய ஊட்டச்சத்து வாரவிழா

பள்ளிப்பட்டு, செப். 23: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கீழ் பாலாபுரம் அங்கன்வாடி மையத்தில், ‘ஆல் தி சில்ரன்’ அறக்கட்டளை சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரவிழா கொண்டாடப்பட்டது. கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஞானமணி பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சத்துணவு வழங்கி, ஊட்டச்சத்து அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முடிவில் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜினி நன்றி கூறினார்.

The post ஆர்.கே.பேட்டை அருகே தேசிய ஊட்டச்சத்து வாரவிழா appeared first on Dinakaran.

Tags : National Nutrition Week ,RK Pettah ,Balapuram Anganwadi Center ,RK Pettah Union ,Tiruvallur District ,All the Children' Foundation ,Dinakaran ,
× RELATED ஆர்.கே.பேட்டை அருகே பொருளாதாரத்தில்...