×

சுகாதாரமற்ற 74 கிலோ மட்டன், சிக்கன் பறிமுதல் ஏற்காட்டில் பூத்துக்குலுங்கும் ஆப்பிரிக்கன் துலிப் மலர்கள்

ஏற்காடு, செப்.23: ஏற்காட்டில், ஆப்பிரிக்கன் துலிப் மலர்கள் பூத்து குலுங்குவது கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் பல்வேறு வண்ண பூக்கள் ஆங்காங்கே பூத்து குலுங்குகின்றன. அந்த வகையில் ‘ஸ்பாத்தோடியா கம்முலேட்டா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆப்பிரிக்கன் துலிப் மலர்கள் கொத்து கொத்தாய் பூத்துக்குலுங்குகின்றன. ஏற்காடு ஏரி பூங்கா மற்றும் ஏற்காடு மலைப்பாதைகளில் ஆப்பிரிக்கன் துலிப் மலர்கள் பூத்துள்ளன. மனதை மயக்கும் இந்த பூக்கள், சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைப்பதாக உள்ளது. இந்த பூக்கள் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய தன்மை கொண்டது. சிகப்பு, மஞ்சள் நிறங்களில் துலிப் மலர்கள் பூக்கும். மலரில் சுற்றிலும் இதழ்கள் சூழ்ந்து, மையப்பகுதி தாமரை வடிவில் இருப்பது கூடுதல் சிறப்பு. ஏற்காடு ஏரி பூங்காவில் பூத்துள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

The post சுகாதாரமற்ற 74 கிலோ மட்டன், சிக்கன் பறிமுதல் ஏற்காட்டில் பூத்துக்குலுங்கும் ஆப்பிரிக்கன் துலிப் மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Salem district ,
× RELATED ஏற்காடு மலைப்பாதையில் 5 பேர் பலி:...