
சேலம், செப்.23: சேலம் நாட்டாண்மை கழகம் அருகே, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமாயி தலைமை வகித்தார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வம் விளக்க உரையாற்றினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த முறையில் பணிபுரிந்த தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல், சத்துணவு, மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.