×

விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ஜிப்சம்

பென்னாகரம், செப்.23: பென்னாகரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பென்னாகரம் வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானிய விலையில் ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு அதிக பட்சமாக 8 மூட்டை, அதாவது 400 கிலோ ஜிப்சம் வழங்கப்படுகிறது. ஜிப்சம் மானிய விலையில் பெற, நிலத்தின் சிட்டா மற்றும் ரேஷன் கார்டு நகலை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். நிலக்கடலையில் திரட்சியான மகசூல் பெற அடியுரமாக 200 கிலோ ஜிப்சமும், 45வது நாளில் 200 கிலோ ஜிப்சமும், ஒரு ஹெக்டேர் பரப்பிற்கு இட வேண்டும். ஜிப்சம் இடுவதால் எண்ணெய் வித்து கூடுவதுடன், காய்கள் திரட்சியாக, பொக்கில்லாமல் கிடைக்கும். விவசாயிகளுக்கு தேவையான ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீதம் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ஜிப்சம் appeared first on Dinakaran.

Tags : Pennagaram ,Subramanian ,Assistant Director of ,Dinakaran ,
× RELATED தருமபுரி பென்னாகரம் அருகே போக்சோ...