×

லக்ஸ் இன்டஸ்டீரிஸ் ரூ.200 கோடி வரி ஏய்ப்பு மோசடி: வருமான வரித்துறை சோதனை

கொல்கத்தா: ரூ.200 கோடி வரி ஏய்ப்பு மோசடி தொடர்பாக லக்ஸ் இன்டஸ்டீரிஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வகையான உள்ளாடைகளை தயாரிக்கும் இந்தியாவின் மிகப்பழமையான நிறுவனம் லக்ஸ் இன்டஸ்டீரிஸ் மேற்குவங்கம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ரூ.200 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து நிறுவனத்துக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஏதேனும் பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வௌியாகவில்லை. இந்த சோதனை காரணமாக நேற்று தேசிய பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 3.02 சதவீதம் சரிவடைந்து ரூ.1473 ஆக முடிவடைந்தது.

The post லக்ஸ் இன்டஸ்டீரிஸ் ரூ.200 கோடி வரி ஏய்ப்பு மோசடி: வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Lux Industries ,Kolkata ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...