×

மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு: மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

சென்னை: தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு இடஒதுக்கீட்டிற்குள் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: தமிழகத்தில் 1921ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அவர்கள் தங்கள் ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கினார்கள். 1929ம் ஆண்டு செங்கல்பட்டில் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்க மாநாட்டை நடத்தினார். அதில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

60 ஆண்டுகளுக்குப் பின் கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி பெரியாரின் உறுதிமொழியை நிறைவேற்றினார். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆரம்பத்தில் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே என்று இருக்கிறது. இது மிகக் குறுகிய காலம் என்பதால் அதை நீட்டிக்க வேண்டும். தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு: மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vigo ,Rajya Sabha ,CHENNAI ,Vaiko ,Dinakaran ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பச்சைத் துரோகம்: வைகோ கண்டனம்