
புதுடெல்லி: மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் மென்பொருளை தணிக்கை செய்யகோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த சுனில் அஹ்யா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளை சுயேச்சையான அமைப்பு மூலம் தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
அந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்,தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் சட்ட விதிகளை மீறி தேர்தல் ஆணையம் செயல்பட்டது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் காண்பிக்கவில்லை என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்வதற்கு முன் தேர்தல் ஆணையத்தில் இது போன்ற ஒரு மனுவை சுனில் அஹ்யா கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post வாக்கு பதிவு இயந்திர மென்பொருளை தணிக்கை செய்ய உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.