
துபாய்: உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ரூ.33.24 கோடி வழங்கப்பட உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இந்தியாவில் அக்.5ம் தேதி தொடங்கி நவ. 19 வரை நடைபெற உள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்டு ராபின் லீக் சுற்றில் மோத உள்ளன.
அகமதாபாத், மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள தொடக்க போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் கைகலக்கின்றன. இந்த நிலையில், உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரொக்கப் பரிசாக ரூ.33.24 கோடி வழங்கப்படும் என ஐசிசி நேற்று அறிவித்துள்ளது. பைனலில் தோற்று 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.16 கோடி கிடைக்கும். அரையிறுதியில் தோற்று வெளியேறும் 2 அணிகளுக்கு தலா ரூ.6.65 கோடி வழங்கப்படும். லீக் சுற்றுடன் மூட்டையை கட்டும் 6 அணிகளுக்கும் கணிசமான தொகை கிடைக்கும். இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.83.10 கோடியாகும்.
The post உலக சாம்பியனுக்கு ரூ.33 கோடி ரொக்கப் பரிசு: ஐசிசி அறிவிப்பு appeared first on Dinakaran.