வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை பகுதி சந்தல் வாய்க்கால் அருகே கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் கடலில் கவிழ்ந்து மூழ்கிய நிலையில் பைபர் படகு கரை ஒதுங்கி இருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் க்யூபிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், கரை ஒதுங்கிய படகில் OFRPA- 0454-KCH என்ற எண் எழுதப்பட்டிருந்ததும், படகின் பின் பகுதியில் பிளவு ஏற்பட்டு சேதமடைந்திருந்ததும், இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த படகு என தெரியவந்தது. அந்த படகில் இருந்து போயா (உருண்டை மிதவை), டியூப், சிறிய பலகை ஆகியயை பறிமுதல் செய்யப்பட்டது.
The post இலங்கை பைபர் படகு கரை ஒதுங்கியது appeared first on Dinakaran.