×

பெரியாறு அணைக்கு வரும் நீர் இடுக்கி அணைக்கு மடை மாற்றம்? விவசாயிகள் குற்றச்சாட்டு

கூடலூர்: தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பருவமழை காலத்தில் இயல்பைக் காட்டிலும் இந்த ஆண்டு சுமார் 50 சதவீதம் வரை குறைவாகவே மழை பெய்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி நேற்று வரை 22 நாட்களில், 20 நாட்கள் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் 118.10 அடியாக இருந்த பெரியாற்ய் அணையின் நீர்மட்டம் நேற்று 119.05 அடியாக, வெறும் 0.95 அடி (சுமார் 1 அடி) மட்டுமே உயர்ந்துள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு பெரியாறு அணையின் நீர்மட்டமும் கடந்த ஆண்டைக்காட்டிலும் 15.90 அடி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.95 அடியாக இருந்தது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 22 நாட்களில் 20 நாட்கள் மழை பெய்திருந்தும் அணைக்கு சராசரி வினாடிக்கு 510.04 கனஅடி நீர்வரத்து மட்டுமே இருந்துள்ளது. அதனால் பெரியாறு அணைக்கு வரும் நீர் கேரளாவில் உள்ள இடுக்கி அணைக்கு மடை மாற்றப்படுவதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தமிழக அரசு பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான 232.80 சதுர மைல்கள் பகுதியை, கண்காணிப்பு குழுவின் முன்னிலையில் ட்ரோன் மூலமாக ஆய்வு செய்து இதில் உள்ள சதியை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

The post பெரியாறு அணைக்கு வரும் நீர் இடுக்கி அணைக்கு மடை மாற்றம்? விவசாயிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Periyar Dam ,Idukki Dam ,Kudalur ,Tamil Nadu ,Kerala ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் இருந்து...