×

பண்பாடற்ற அரசியல் செய்யும் அண்ணாமலை: பாலகிருஷ்ணன் கண்டனம்

நெல்லை: ‘பண்பாடற்ற அரசியலை அண்ணாமலை செய்து வருகிறார்’ என்று பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். நெல்லை ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை பா.ஜ. ஆட்சிக்கு வந்த போதே நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் தேர்தலுக்காக தற்போது இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். அதுவும் இதை 2029ம் ஆண்டு முதல் தான் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளனர். இது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் தான். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது.

2014, 2019களில் இதுபோன்ற கூட்டணி இல்லை. இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியால் குழப்பம் என்பது தவறான தகவல். பா.ஜ. தலைவரான அண்ணாமலைக்கு ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கான குறைந்தபட்ச தகுதிகூட இல்லை. அவர் ஒரு பண்பாடற்ற அரசியல் செய்து வருகிறார். தந்தை பெரியார், அண்ணா போன்ற தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பல தலைவர்களை அண்ணாமலை அவதூறாக பேசி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியா கூட்டணியை சீர்குலைக்க பல்வேறு சாகசங்களை பாஜ செய்து வருகிறது. மதவெறி ஆட்சியை அகற்ற இந்தியா கூட்டணி இணைந்து செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பண்பாடற்ற அரசியல் செய்யும் அண்ணாமலை: பாலகிருஷ்ணன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Balakrishnan ,Nellai ,Marxist ,Nellai Redyarpatti ,
× RELATED என்னால் மன்னிப்பு கேட்க முடியாது :...