×

வேலைவாய்ப்பற்ற இளைஞருக்கான உதவித்தொகை திட்டம் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் தகவல்

சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் ஆணையரக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதில் அவர் பேசியதாவது: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு துறையால் தமிழகமெங்கும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி இந்த ஆண்டின் இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்னும் இலக்கு எய்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை,தேர்ச்சி விகிதம் 100% எய்தபட வேண்டும். தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post வேலைவாய்ப்பற்ற இளைஞருக்கான உதவித்தொகை திட்டம் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Minister for Labor Welfare and Skill Development ,Ganesan ,
× RELATED மானூரில் மாணவி மாயம்