×

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சற்று நேரத்தில் சந்திக்க அதிமுக நிர்வாகிகள் திட்டம்

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சற்று நேரத்தில் சந்திக்க அதிமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். அண்ணா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்க அண்ணாமலை மறுத்த நிலையில் அதிமுகவினர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய அதிமுக தூதுக்குழு டெல்லியில் முகாமிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தவும் அண்ணாமலை மறுப்பு, அண்ணா பற்றி விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க உத்தரவிட வேண்டும் என பாஜக தலைமையிடம் அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சற்று நேரத்தில் சந்திக்க அதிமுக நிர்வாகிகள் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Interior Minister ,Amitshah ,Delhi ,Union Home Minister ,Amitsha ,Anna ,Dinakaran ,
× RELATED மோடி, அமித்ஷா கட்டளைப்படி...