×
Saravana Stores

தமிழ்நாட்டில் தொன்மையான 237 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தொன்மையான 237 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிட மாதம் இருமுறை மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (22.09.2023) மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், வளவனூர், அருள்மிகு கோணம்மன் திருக்கோயில், செஞ்சி, அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, அருள்மிகு அய்யனார் திருக்கோயில், ஒரத்தநாடு, அருள்மிகு சுந்தரவிநாயகர் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோயில், ஆலங்குடி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், ஒட்டன்சத்திரம், அருள்மிகு கரிவரதராஜபெருமாள் திருக்கோயில், சேலம் மாவட்டம், ஓமலூர், அருள்மிகு வசந்தீஸ்வரர் திருக்கோயில், மேட்டூர், அருள்மிகு சக்தி பெரியமாரியம்மன் திருக்கோயில், கோவை மாவட்டம், சலீவன் வீதி, அருள்மிகு யோக ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, அருள்மிகு கருப்பராயசுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், பெருந்துறை, அருள்மிகு அத்தனூரம்மன் பொடராயசுவாமி திருக்கோயில்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், மணவாசி, அருள்மிகு மத்தியபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருள்மிகு உச்சிமாகாளியம்மன் திருக்கோயில், காங்கயம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், அருள்மிகு சோழைகாத்த அய்யனார் திருக்கோயில், காளையார்கோவில், அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம், எருமைப்பட்டி, அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், திருவாடானை, அருள்மிகு மகாலிங்கசாமி திருக்கோயில் உள்ளிட்ட 237 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் தொன்மையான 237 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : State Expert Committee ,237 Thirukoils ,Tamil Nadu ,Chennai ,237 Thirukoils of Anchantha ,Chief Minister ,G.K. ,Stalin ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...