×

டூரட் சிண்ட்ரோம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

ராணிமுகர்ஜி நடித்த ஒரு ஹிந்தி திரைப்படம் ‘Hichki‘ கொரோனா நாயகி நன்றாகப் படித்தவராகவும், அதே சமயம் தொடர்ந்து ஒரு மாதிரியான ஒலிகளை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பவராகவும், கைகள் தன்னிச்சையாக கழுத்துக்குப் போவதாகவும் அப்படத்தில் நடித்து இருப்பார். இது என்ன மாதிரியான பாதிப்பு என்றால், மூளைநரம்பு சம்பந்தமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, டூரட் சிண்ட்ரோம் (Tourette Syndrome) இருப்பதாக கூறியிருப்பார்கள். அந்த பிரச்சனையை மீறி அவர் படித்து, வேலைக்கு எப்படி போனார் என்றும், அந்த வேலையில் எப்படி ஜெயித்தார் என்றும் படம் முழுக்க அந்நோயின் தாக்கத்தினை காண்பித்து இருப்பார்கள்.

டூரட் சிண்ட்ரோம் இப்படி எல்லாம் மனநோய் இருக்கிறது என்று கேட்டால், இருக்கிறது என்பதுதான் உண்மை. பொதுவாக இந்த பாதிப்பு ஆறு வயதில் இருந்து 15 வயதுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நியூரோ சைக்காட்ரிக்கில் கூறுகிறார்கள்.இந்நோய் பாதிப்பில் இருக்கும் நபரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் நானும் மனநல மருத்துவமனையில் இருக்கும் பொழுது ஒரு பள்ளி மாணவனைச் சந்தித்தேன்.

அவன் Just Fuck Her, You are the bitch, Shut up Slut என்று இம்மாதிரியான வார்த்தைகளை தொடர்ந்து ரிசப்ஷனில் அதிக சவுண்டுடன் கூறிக்கொண்டிருந்தான். அவனுடைய கழுத்தை அடிக்கடி இழுப்பது, இந்த வார்த்தைகளின் ஒலியால் ஒரு வித வெறுப்பு, தனக்கு ஏன் இப்படி வந்தது என்ற கேள்வியின் தாக்கத்தில் வந்த மனஅழுத்தம் என்றும், அதற்கான சிகிச்சைக்காக வந்திருக்கிறேன் என்றும் சொல்லிக்கொண்டு மிகவும் சோர்வாக மருத்துவமனையில் உட்கார்ந்து இருந்தான்.

அவனுடைய பெற்றோர்களுக்கும் இது என்ன மாதிரியான பாதிப்பு என்று அவர்களுக்கும் புரியவில்லை. ஆனால் அவர்கள் வேறு சில மருத்துவர்களை பார்த்து, அதன் சிகிச்சை முறைகள் கேட்கவில்லை என்றார்கள். அவனுக்கு பார்த்து ஒரு மருத்துவர் குழந்தைகள் மனநல மருத்துவரை பார்க்கச் சொல்லி இருக்கிறார். அதனால் தான் மனநல மருத்துவமனைக்கு அவர்கள் வந்திருந்ததாக சொன்னார்கள்.

இவனுடைய மற்ற தகவல்கள் அனைத்தும் பார்த்துவிட்டு அந்த மருத்துவமனையின் குழந்தைகள் மனநல மருத்துவர் சொன்ன போதுதான் இவன் டூரட் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டு இருப்பதாக எங்களுக்குத் தெரியவந்தது. உண்மையில் அவன் நன்றாக பேசினான், நன்றாக சிந்திக்கிறான். அவனுடைய மனவலியை தெளிவாக பகிர்ந்து கொண்டான்.

ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி தேவையில்லாத அவர்கள் பேசும் ஒலி, சைகைகள், தன்னிச்சையாக தொடர்ந்து செய்யும் செய்கைகள், உதாரணமாக தொடர்ந்து கையை அசைப்பது, தலையை அசைப்பது என்று இருக்கும். இவையே அவர்களின் மீது ஒரு சுயசந்தேகம், சமூகத்தின் பார்வை எல்லாமே அவர்களை இன்னும் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்கும். இவற்றுக்கான சிகிச்சை என்றால் மனநல மருத்துவர்களின் கண்காணிப்பில் கொடுக்கப்படும் மருந்துகள், தெரபிகள் என்று இருக்கும். சிகிச்சை முறையில் தனிப்பட்ட ரீதியாக இவர்களைக் கையாளக்கூடாது.

உளவியல் சிகிச்சை அல்லது உளவியல் பாதிப்பை சொல்லும் ஒரு படத்தை பார்க்கும் போதும், அதையே நேரில் சந்திக்கும் போதும் உள்ள வேற்றுமை என்றுமே நாம் கணக்கிட முடியாத தூரத்தில் இருக்கிறது. ஆனால் கலை சமூகத்தில் உள்ள நிகழ்வினை ஒரு புள்ளி வைத்து தெரியப்படுத்துகிறது என்றால், அறிவியல் பல மடங்கு அந்தப் புள்ளியை பெருக்கி, ஒரு சிறந்த சிகிச்சைக்கான வழியை கண்டுபிடித்து விடுகிறது. ஏனென்றால் அறிவியலை விட மக்கள் எளிதாக படைப்புகளை பார்த்து விடுகிறார்கள். இதற்காகத்தான் இன்றும் ஒவ்வொரு படைப்பாளிகளையும் பார்க்கும் பொழுது மக்கள் பரவசமடைகிறார்கள்.

இனி டூரட் சிண்ட்ரோம் உள்ள நபர்களை யாராவது பார்த்தால், கெட்ட வார்த்தைகள் வேண்டுமென்றே பேசுகிறார்கள் என்றும், தேவையில்லாத சைகைகளை செய்கிறார்கள் என்றும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். அதற்கான விழிப்புணர்வு படமாக Hichki எடுத்து இருக்கிறார்கள். அந்தப் படத்தை பார்த்துவிட்டு, நீங்கள் பார்க்கும் மனிதர்களில் யாராவது இருந்தால், அவர்களின் நிலையை ஓரளவு புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

தொகுப்பு: காயத்ரி மஹதி

The post டூரட் சிண்ட்ரோம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Ranimukurjie ,Corona ,
× RELATED தேசமெங்கும் சிலைகள் வடிவிலும், நம்...