×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 221 புள்ளிகள் சரிந்து 66,009 புள்ளிகளில் நிறைவு..!!

மும்பை: 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் சரிந்த நிலையில் சென்செக்ஸ் 66,000 புள்ளிகளுக்கு கீழ் சென்று மீண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 221 புள்ளிகள் சரிந்து 66,009 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. இடைநேர வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 277 புள்ளிகள் குறைந்து 65,953 புள்ளிகளாக சரிந்து மீண்டது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 17-நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 68 புள்ளிகள் சரிந்து 19,674 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 221 புள்ளிகள் சரிந்து 66,009 புள்ளிகளில் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : BSE Sensex ,Mumbai ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!