×

தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு அபராதம் மதுரை கிளை உத்தரவு

மதுரை: பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதம் செய்ததாக கூறி தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் தர வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடுக்கப்பட்டது.

அதாவது, ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற உத்தரவை உடனே நிறைவேற்ற கோரி சிறுமியின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற இவ்வளவு காலதாமதம் ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதன்பின் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டிய ரூ. 1 லட்சத்துடன் 6% சதவீத வட்டி மற்றும் வழக்கிற்கான செலவையும் சேர்த்து வழங்க நீதிபதி உத்தரவிட்டது. எனவே, பரமக்குடியை சேர்ந்த ராமலட்சுமி என்பர் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து மதுரை கிளை நீதிபதி புகழேந்தி ஆணையிட்டார்.

The post தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு அபராதம் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai Branch ,Home Secretary ,Tamil Nadu Government ,Madurai ,Home Secretary of the ,Government of Tamil Nadu ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு...