×

பரமக்குடி அருகே கண்மாயில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்: விவசாயத்தை காக்க கிராம மக்கள் கோரிக்கை..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி கண்மாயில் உள்ள தண்ணீர் பச்சை நிறமாக மாறி மீன்கள் செத்து மிதப்பதால் தண்ணீரை வெளியேற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி அருகே வேந்தோணி பெரிய கண்மாயை நம்பி வேந்தோணி, முத்துச்செல்லாபுரம், செல்லூர் உள்ளிட்ட 17 கிராமங்களை சேர்ந்தவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட சாகுபடியையும் அவர்கள் செய்துவருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக கண்மாயிலுள்ள தண்ணீரை அகற்றாததால் பச்சை நிறமாக மாறியுள்ளது. ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்மாய் தண்ணீர் விஷ தன்மையாக மாறியுள்ளதால் இந்த தண்ணீரை பருகும் கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கண்மாய்த்தண்ணீரில் துணி துவைத்து குளிக்கும் போது உடலில் அரிப்பு ஏற்படுவதாக கிராமமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

The post பரமக்குடி அருகே கண்மாயில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்: விவசாயத்தை காக்க கிராம மக்கள் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Kanmai ,Paramakudi ,Ramanathapuram ,Vendoni Kannmai ,Ramanathapuram district ,Kanmail ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்