சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதலமைச்சரின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும்.
கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும். இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை, உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை. பேருந்தில் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணம் அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலக் கல்லூரிக்கு வரும் புதுமை பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நகைக்கடன் ரத்து. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், புதிய மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கம் என மகளிருக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவது திரவிதாஸ் மாடல் அரசு என்பதை நீங்கள் அறிவீர்கள்.
மகளிர் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை இத்திட்டங்கள் உருவாக்கி உள்ளன. இந்த வரிசையில் மற்றமொரு மாபெரும் திட்டம்தான் தேர்தலுக்கு முன்னதாக நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் மிகமிக முக்கியமான மகளிர் உரிமை திட்டம் இந்த திட்டத்தின் பயனாளியாகத் தகுதியின் அடிப்படியில் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள் என்பதை மிகுந்த மகிழிச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இனி மாதந்தோறும் ஆயிரம் ரூபா தங்களின் வங்கிக்கணக்கில் தமிழ்நாடு அரசால் நேரடியாக வரவு வைக்கப்டும். பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் அவரது தாய் சகோதரி மனைவி, மகள் எனப் பெண்களின் பல மணிநேர உழைப்பு இருக்கிறது. இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கிகாரமே இத்தொகையாகும் .
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி உள்ளாட்சி அமைப்புகளிலும் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு வாங்கிய மகளிர் முன்னேற்ற மாண்பாளர் முத்தமிழ் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் இந்த திட்டம் தொடங்கப்படுவதால் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது உங்களுக்கான உதவித்தொகை அல்ல உரிமை தொகை உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத்தொகை என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post இது உங்களுக்கான உதவித்தொகை அல்ல உரிமை தொகை உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத்தொகை: பயனாளிகளுக்கு முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.