×

மகளிர் மசோதா வெறும் சட்டம் அல்ல, புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக பிரகடனம்: பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: மகளிர் மசோதா என்பது வெறும் சட்டம் அல்ல; புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக பிரகடனம் என்று பாஜக மகளிர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் ெதாடரில் ஒன்றிய பாஜக அரசு, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது. அதையடுத்து இன்று காலை பாஜக மகளிரணியின் சார்பில் டெல்லி பாஜக தலைமையகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், ‘அனைத்து பெண்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு கூட்டத் தொடரில் புதிய சரித்திரத்தை படைத்தோம். அதற்கான வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வருங்கால தலைமுறையினர், இந்த சட்டம் குறித்து பேசுவார்கள். இச்சட்டத்தை இயற்றியதை எங்களது பாக்கியமாக கருதுகிறோம்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது வெறும் சட்டம் அல்ல, புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக பிரகடனமாகும். பெண்கள் தலைமையிலான புதிய சகாப்தத்திற்கான உத்தரவாதத்தை நிறைவேற்றி உள்ளோம். பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, வளர்ச்சி ஆகியவற்றுக்கான திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்வார்கள். இந்தச் சட்டத்தின் மூலம் ஜனநாயக அமைப்பில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய முடியும். கடந்த 30 ஆண்டுகளாக இச்சட்டத்தை கொண்டு வர பாஜக முயன்றது. தற்போது அச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். பெரும்பான்மையுடன் கூடிய நிலையான அரசு அமைந்ததாலும், வலிமையான அரசைத் தேர்ந்தெடுத்ததாலும் மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வரமுடிந்தது’ என்றார்.

The post மகளிர் மசோதா வெறும் சட்டம் அல்ல, புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக பிரகடனம்: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,
× RELATED ஒன்றிய அரசின் கொள்கைகளால்...