×

மகளிர் உரிமை திட்டத்தில் புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ஏற்கனவே விண்ணப்பிக்க முடியாமல் போன பெண்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய அளிக்கப்பட்டுள்ள அவகாச காலத்திலேயே புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தது. இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் நேற்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து. தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளும், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதோர் மேல் முறையீடு செய்ய வழங்கப்பட்டிருக்க கூடிய அதே கால அவகாசத்தில் புதிதாக விண்ணப்பிக்கலாம் . கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இவ்வளவு பயனாளிகள் என்ற இலக்கு கிடையாது -இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.

The post மகளிர் உரிமை திட்டத்தில் புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Minister Thangam South ,Chennai ,Minister ,Thangam Tennarasu ,
× RELATED முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும்...