×

புரட்டாசி முதல் சனிக்கிழமை; கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு வழங்க 10 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்: பூக்கள் மூலம் அலங்கரிக்கவும் ஏற்பாடு

ஈரோடு: கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு வழங்க 10 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம் . அதன்படி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்குவதற்காக 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதே போல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவில் வளாகத்தை பூக்களால் அலங்கரிப்பதற்காக செவ்வந்தி செண்டுமல்லி உள்ளிட்ட மலர்களைக் கொண்டு மாலை கட்டும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post புரட்டாசி முதல் சனிக்கிழமை; கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு வழங்க 10 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்: பூக்கள் மூலம் அலங்கரிக்கவும் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Puratasi ,Kasthuri ,Aranganathar ,Temple ,Erode ,Kasthuri Aranganathar temple ,
× RELATED கோவில்பட்டி அருகே துறையூரில் ₹14...