×

கண்ணாடி பாட்டிலில் பால் விற்பதை மக்கள் விரும்பவில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிர்வாகம் அறிக்கை

சென்னை: கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை என ஆவின் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்குரிய வழக்குகளை சேனை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் ஆவின் பாலை பாக்கெட்களில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும் என்று கூறிய உயர்நீதிமன்றம் இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆவின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உய்ரநீதிமன்ற உத்தரவுபடி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆவின் பாலை பாட்டிலில் விற்பனை செய்தால் ஆதரவளிப்பீர்களா, பாட்டிலில் விற்க வேண்டுமா?, பாலித்தீன் கவரில் விற்கவேண்டுமா என்ற கேள்விகளோடு பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் நுகர்வோர் அதிகமுள்ள பகுதிகளில் பாட்டிலில் பால் விற்பனை செய்யும் போது விலை அதிகமாக இருக்கும் என்பதால் பாலித்தீன் உரைகளிலேயே தொடர வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கை அக்டோபர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

The post கண்ணாடி பாட்டிலில் பால் விற்பதை மக்கள் விரும்பவில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிர்வாகம் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Awin administration ,Chennai High Court ,Chennai ,Awin ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...