×

நபார்டு வங்கியில் 150 உதவி மேலாளர்கள்

பணி: உதவி மேலாளர்.
i) General: 77 இடங்கள் (பொது-31, எஸ்சி-11, எஸ்டி-9, ஒபிசி-18, பொருளாதார பிற்பட்டோர்-8).
ii) Computer/Information Technology: 40 இடங்கள் (பொது-16, எஸ்சி-6, எஸ்டி-1, ஒபிசி-14, பொருளாதார பிற்பட்டோர்-3).
iii) Finance: 15 இடங்கள் (பொது-3, எஸ்சி-4, எஸ்டி-1, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-2)
iv) Company Secretary: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
v) Civil Engineering: 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, ஒபிசி-1)
vi) Electrical Engineering: 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
vii) Geo Informatics: 2 இடங்கள் (பொது)
viii) Forestry: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1)
ix) Food Processing: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
x) Statistics: 2 இடங்கள் (பொது)
xi) Mass Communication/Media Specialist: 1 இடம் (பொது).
வயது: 01.09.2023 தேதியின்படி 21 லிருந்து 30க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.44,500- 89,150.
தகுதி: General/Finance/Company Secretary தவிர இதர பாடப் பிரிவுகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். General பிரிவுக்கு ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டமும், Finance பிரிவுக்கு BBA/Banking/Finance பாடப்பிரிவில் பட்டமும், Company Secretary பணிக்கு ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் ICSI அமைப்பில் உறுப்பினராகவும் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகள் 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் நடத்தப்படும் முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய மையங்களில் நடைபெறும்.
கட்டணம்: ரூ.800/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ₹150/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www..nabard.org/career என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.09.2023.

The post நபார்டு வங்கியில் 150 உதவி மேலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : NABARD Bank ,Dinakaran ,
× RELATED பால் பாக்கெட்டுகள் தயாரித்து...