×

நீலகிரி வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் குரூப் சி பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1Stenographer Grade II: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). வயது: 18 லிருந்து 27க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதி, அதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களிலும், இந்தியில் 65 நிமிடங்களிலும் விரிவாக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
2Lower Division Clerk: 7 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 27க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள், இந்தியில் 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
3Civilian Motor Driver (Ordinary Grade): 5 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-1). வயது : 18 லிருந்து 27க்குள். சம்பளம்: ரூ.19,900- 63,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 2 வருட பணி அனுபவம்.

4Sukhani: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நீச்சலில் சான்றிதழ் மற்றும் 2 வருட பணி அனுபவமும், போர்டு மோட்டார்ஸை பயன்படுத்துவதில் நல்ல அறிவுத் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
5Fireman: 16 இடங்கள் (பொது-8, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 27க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம்- 165 செ.மீ., எடை- 50 கிலோ, மார்பளவு- சாதாரண நிலையில் 81.5 செ.மீ, விரிவடைந்த நிலையில் 85 செ.மீ. 63.5 கிலோ எடை கொண்ட மனிதனை தூக்கிக் கொண்டு 96 வினாடிகளில் 183 மீட்டர் ஓடும் திறன், 2.7 மீட்டர் நீளம் தாண்டும் திறன் மற்றும் 3 மீட்டர் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
6Cook: 3 இடங்கள் (பொது). வயது: 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.

7Technical Attendant- Printing Machine Operator: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: பிரின்டிங் மிஷின் ஆபரேட்டரில் ஐடிஐ தேர்ச்சி.

8Multi Tasking Staff- Office and Training: 7 இடங்கள் (பொது-2, எஸ்சி-2, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.dssc.gov.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் விவரங்களை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து, அனைத்து சான்றிதழ்களின் நகல்கையும் சுய சான்றொப்பம் செய்து, கவரில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் சுய முகவரியிட்ட 10 x 22 செ.மீ கவரை ₹22 மதிப்புள்ள ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Commandant, Defence Services Staff College, Wellington, The Niigiris Dt. PIN: 643 231, Tamil Nadu.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.09.2023.

The post நீலகிரி வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் குரூப் சி பணியிடங்கள் appeared first on Dinakaran.

Tags : Nilgiris Wellington Military College ,Nilgiri Wellington Military College Group C ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...