×

ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; பாஜக அரசு அறிவிப்பு பின்னணியில் பெரிய திட்டமுள்ளது: ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி

டெல்லி: 10 ஆண்டுகளுக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்பதற்கு பின்னணியில் பெரிய திட்டம் உள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். 33% மகளிர் இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஒன்றிய அரசு துறைகளில் ஓபிசி பிரிவினர் எவ்வளவு உள்ளனர் என தெளிவாக இல்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் இருந்து கவளத்தை திசைதிருப்புகிறது பா.ஜ.க. அரசு.

நாட்டின் ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பில் 5 சதவீத நிதிதான் ஓ.பி.சி. அதிகாரிகளிடம் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அதிகாரமே ஆதிக்க சாதிகளிடம் தான் உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய பாஜக அரசு மறுக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு சட்டம் இன்று 10 ஆண்டுகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை முடிந்த பின்பே மகளிர் இடஒதுக்கீடு அமலாகும் என கூறப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்பதற்கு பின்னணியில் பெரிய திட்டம் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும் என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கோடி பேர் உள்ளனர் என்பதை ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே உறுதிசெய்ய முடியும். 10 ஆண்டுகளுக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்பதற்கு பின்னணியில் பெரிய திட்டம் உள்ளது இவ்வாறு கூறினார்.

The post ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; பாஜக அரசு அறிவிப்பு பின்னணியில் பெரிய திட்டமுள்ளது: ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP government ,Rahul Gandhi ,Delhi ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி செய்த மேஜை, நாற்காலி மாற்றுத் திறன் பள்ளிக்கு பரிசு