
டெல்லி: ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. காந்தி வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல், ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கோடி பேர் உள்ளனர் என்பதை ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே உறுதிசெய்ய முடியும். மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றார். 10 ஆண்டுகளுக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும் என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
The post ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: காங். எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.