×

அனைவருக்கும் சுகாதாரம் என்பதை மக்களை தேடி மருத்துவம் திட்டம் உறுதி செய்துள்ளது: திட்டக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: அனைவருக்கும் சுகாதாரம் என்பதை மக்களை தேடி மருத்துவம் திட்டம் உறுதி செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.
சில முக்கிய கொள்கைகளை வகுக்கும் பணி திட்டக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

கட்டணமில்லா பயணச் சலுகை மூலம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது திட்டக்குழு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் திறன்மிகுந்த மாணவர்களாக உருவாகி வருகின்றனர். நான் முதல்வன் திட்டத்தை மேலும் செழுமைப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. செலவினத்தின் அடிப்படையில் இல்லாமல் கிடைக்கும் பயன்களின் அடிப்படையில் திட்டங்களை அளவிட வேண்டும். நான் முதல்வன் திட்டம் மூலம் 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.1000 வீதம் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு மகளிருக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் உரையாற்றி வருகிறார். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், சில முக்கிய கொள்கைகளை வகுக்கும் பணி திட்டக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை பெற்ற பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

The post அனைவருக்கும் சுகாதாரம் என்பதை மக்களை தேடி மருத்துவம் திட்டம் உறுதி செய்துள்ளது: திட்டக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Project Committee ,CHENNAI ,Medicine ,State Planning Committee ,M.K.Stalin ,Planning Committee ,
× RELATED கனமழை எச்சரிக்கை; திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்