×

தரமான மருத்துவர்களுக்கு எதிராக உள்ளது நீட் தேர்வு: ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. மருத்துவர் எழிலன் பேட்டி

சென்னை: தரமான மருத்துவர்களுக்கு எதிராக நீட் தேர்வு உள்ளது என்று மருத்துவர் எழிலன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாக ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. மருத்துவர் எழிலன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். எம்டி, எம்எஸ் நுழைவுத்தேர்வு குறித்து ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன் விமர்சனம் செய்தார். அரசு மருத்துவ கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. மைனஸ் 40 மதிப்பெண்கள் பெற்றவரும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரமுடியும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் படிப்பில் சேர வசதியாகவே மதிப்பெண் தளர்வு என குற்றம்சாட்டினார்.

The post தரமான மருத்துவர்களுக்கு எதிராக உள்ளது நீட் தேர்வு: ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. மருத்துவர் எழிலன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : lamp M. l. PA ,doctor ,avelan ,Chennai ,Adelan ,Lamp ,M. l. PA ,Ahelan ,Dinakaran ,
× RELATED மனவெளிப் பயணம்