×

இந்தியாவில் ரூ.79,900 விலையில் ஐபோன் 15 சீரிஸ் விற்பனை தொடங்கியது: மும்பை, டெல்லி கடைகளில் குவிந்த கூட்டம்

மும்பை: ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன் 15 சீரிஸ் மாடல் போன்களின் விற்பனை இந்தியாவில் தொடங்கிய நிலையில் அவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வம் கட்டிவருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் கடந்த 12ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மாக்ஸ் என பல்வேறு மடல்கள் இந்த சீரிஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் பிளஸ் மாடல் போன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். இந்தியா, சீனா உள்ளிட்ட பலநாடுகளில் ஐபோன் 15 சீரிஸ் போன்களின் விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே புதிய மாடல் ஐபோன்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாட்டின் முதல் ஆப்பிள் நிறுவன விற்பனை நிலையம் அமைந்துள்ள மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் நேற்று மதியம் முதல் வாடிக்கையாளர்கள் குவிய தொடங்கினர்.

காலை 8 மணிக்கே கடை திறக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆர்வத்துடன் ஐபோனை வாங்கி சென்றனர். இதே போல டெல்லியின் சாக்கேஜ் பகுதியில் இருக்கும் வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவன ஸ்டோர் முன் பல மணி நேரம் வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். ஐபோன் 15 சீரிஸ் போன்களின் தொடக்க விலை ரூ.79,900, இதுவரை ஐபோன் மாடல்களில் இல்லாத வண்ணத்தில் இந்த சீரிஸ் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவில் ரூ.79,900 விலையில் ஐபோன் 15 சீரிஸ் விற்பனை தொடங்கியது: மும்பை, டெல்லி கடைகளில் குவிந்த கூட்டம் appeared first on Dinakaran.

Tags : India ,Mumbai ,Delhi ,Apple ,Dinakaran ,
× RELATED சென்னை, மும்பையில் ₹45 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி