×

திருத்துறைப்பூண்டியில் பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட தாலுகா அலுவலர்கள்

திருத்துறைப்பூண்டி, செப். 22: திருத்துறைப்பூண்டி தாலுகாவில் அடையாள அட்டை அணிந்து தாலுகா அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம், திருத்துறைப்பூண்டி வட்ட கிளை சார்பில் தாலுகா அலுவலகத்தில், அரசின் கவனத்தை ஈர்த்திட அனைத்து அலுவலர்களும் அடையாள அட்டை அணிந்து பணி மேற்கொண்டனர். வட்டத் தலைவர் ஷேக்தாவூத், செயலாளர் சதீஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை உடன் நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளனர். இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான கூடுதல் பணியிடங்களை உடனே வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருவாய் துறை அலுவலர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீது உடன் அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

The post திருத்துறைப்பூண்டியில் பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட தாலுகா அலுவலர்கள் appeared first on Dinakaran.

Tags : Taluk ,Thiruthurapundi ,Thirutharapoondi ,Thiruthurapundi taluk ,Tamilnadu ,Thiruthuraipoondi ,
× RELATED ஆலத்தூர் தாலுகாவில் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு