×

வரலாற்றை பாதுகாக்கும் வகையில் திருவாரூரில் இருந்து திருப்பூருக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைப்பு

திருவாரூர், செப். 22: திருவாரூரில் இருந்து திருப்பூர் மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக ஆயிரத்து 250 டன் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் 2022, 23 பருவத்தில் குறுவை, சம்பா மற்றும் கோடை நெல் சாகுபடியினையடுத்து விவசாயிகளிடமிருந்து 8 லட்சத்து 50 ஆயிரம் மெ.டன் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இவைகளிலிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வருகிறது. வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காகவும், அரிசி மற்றும் நெல்கள் ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து திருப்பூர் மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 21 வேகன்களில் ஆயிரத்து 250 டன் அரிசி மூட்டைகளை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். திருவாரூர், செப். 22: திருவாரூர் என்றாலே வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலும், உலக பிரசித்தி பெற்ற ஆழி தேரோட்டமும்தான் நினைவுக்கு வரும். அதுமட்டுமின்றி திமுகவின் தலைவராகவும், தமிழகத்தின் 5 முறை முதலமைச்சர் பதவி வகித்தவரும், சமூகநீதி காவலராகவும் வாழ்ந்து மறைந்த கருணாநிதி படித்து, வளர்ந்த ஊராகும்.

இத்தகைய பெருமைகள் கொண்ட திருவாரூரில் சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அனபாய சோழன் என்ற மன்னர் ஒருவர் ஆட்சி நடத்தினார். அப்போது அவரது ஒரே மகனான வீதிவிடங்கன் திருவாரூர் நகரில் தேரை ஓட்டிச் சென்றபோது, அந்த தேரில் பசுவின் கன்று ஒன்று அடிபட்டு இறந்து விடவே, இதற்கு நீதி கேட்டு கன்றுவின் தாய் பசுவானது மன்னரின் அரண்மனைக்குச் சென்று ஆராய்ச்சி மணியை பிடித்து இழுத்தது.

அப்போது சத்தம் கேட்டு வெளியில் வந்த மன்னரின் மந்திரிகளில் ஒருவர் நடந்த சம்பவம் பற்றி தெரிந்து கொள்ளவே, எதற்காக மணி அடித்தது என மந்திரியிடம் மன்னர் கேட்டுள்ளார். அப்போது அந்த மந்திரி தயங்கவே உண்மையயை கூறுமாறு மன்னர் கட்டளையிட்டுள்ளார். இதையடுத்து அந்த மந்திரி, மன்னா தாங்கள் மகன் ஓட்டிச் சென்ற தேரில் பசுவின் கன்று அடிபட்டு இறந்துவிட்டது என தெரிவித்துள்ளார். உடனடியாக தனது மந்திரிகளில் ஒருவரை அழைத்து அதே தேரை கொண்டு தனது மகனை தேரில் ஏற்றி கொன்றுவிடுமாறு மன்னர் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு மந்திரிகள் அனைவரும் தயங்கிய நிலையில், தானே அந்த தேரை ஓட்டி சென்று பசுவின் கன்று இறந்த அதே இடத்தில் மகன் வீதிவிடங்கனை படுக்க வைத்து அவர் மீது தேரை ஏற்றி கொன்றதாக வரலாறு கூறுகிறது.

இந்நிலையில் அனபாயசோழன் என்ற பெயர் கொண்ட அந்த மன்னனுக்கு மனுநீதி சோழன் என்ற பட்டத்தை பொதுமக்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மனுநீதி சோழன் வரலாறு குறித்து புகழ்பெற்ற தியாகராஜ சுவாமி கோயிலின் விட்ட வாசல் எதிரே கல்தேர் மண்டபம் ஒன்று பல நூற்றாண்டு காலமாக இருந்து வருகிறது. இந்த மண்டபத்தில் இருந்து வரும் கல்தேரில் மனுநீதி சோழன் தேரை ஓட்டுவது போன்றும், அதன் சக்கரத்தில் வீதிவிடங்கன் சிக்கி இறப்பது போன்று சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்தேர் மண்டபத்தை தினந்தோறும் உள்ளூர் பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருவோரும் பார்வையிட்டு மனுநீதி சோழன் வரலாறு குறித்து அறிந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்தேர் மற்றும் மண்டபமானது சேதமடைந்து வருவதை அறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ரூ.78 லட்சத்தில் பழமை மாறாமல் சீரமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு பணியானது அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மூலம் நடத்தப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

வரலாற்றை பாதுகாக்கும் வகையில் இந்த மணிமண்டபம் சீரமைக்கப்பட்டு வருவதற்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post வரலாற்றை பாதுகாக்கும் வகையில் திருவாரூரில் இருந்து திருப்பூருக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tirupur ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா