×

உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 தொடர்பாக தஞ்சாவூரில் ரூ.1000 கோடி ஈர்க்க இலக்கு

தஞ்சாவூர், செப். 22: உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 தொடர்பாக தஞ்சாவூரில் ரூ.1000 கோடி ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 கோடி மானியம் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் திறப்பு விழா மற்றும் இலச்சினை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 10ம்தேதி அன்று தமிழக முதல்வரால் காணொலி காட்சி வாயிலாக வெளியிடப்பட்டது. இதன்மூலம் வெளிநாடு மற்றும் உள்நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 தொடர்பாக மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூருக்கு 667 எண்ணிக்கையில் ரூ.1000 கோடி முதலீடுகளை ஈர்க்க திட்ட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் அதிபர்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஒற்றைச்சாளர இணையதளம் வாயிலாக விவரங்களை விரைவாக எடுக்கப்படும். மேலும், செய்து தரப்படும். வரைபடம் வங்கிகள் அரசு ஒப்புதல் மற்றும் மூலம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை திட்டங்கள் மூலம் மானிய வசதிகளும் செய்து தரப்படும்.

முதலீட்டு மானியமாக தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை கடனுதவி பெற்ற தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் 5 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. புதிதாக மற்றும் ஏற்கனவே தொழில் புரிபவர்களுக்கு அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் அதிகப்பட்சம் ரூ.5 கோடி வரை கடனுதவி பெறலாம். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.75 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. தவணை தவறாமல் வங்கிக்கடனை செலுத்தும் பயனாளிகளுக்கு 3 சதவீதம் பின்முனை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் இத்திட்டத்தின்கீழ் மானியம் மொத்த திட்ட தொகையில் 35 சதவீதம் ஆகும். மானியம் உச்ச வரம்பு ரூ. 1.50 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மொத்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கிக்கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்கு தமது பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் (PMEGP) திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேல் கல்வித்தகுதி உற்பத்தி தொழில் திட்ட மதிப்பீடு 50 லட்சத்துக்கு மேலும் சேவைத்தொழில் திட்ட மதிப்பீடு 20 லட்சம் வரை கடன் பெறலாம்.

கிராமப்புற தொழில் நிறுவனங்களுக்கு 35 சதவீதமும் நகர்புற தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் மானியத்தொகை வழங்கப்படும். பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் (PMFME) உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழில் துவங்கவும், ஏற்கனவே நடத்தப்படும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்துதலுக்கு ரூ.1.கோடி வரை கடனுதவி பெறலாம். இத்திட்டத்தின்கீழ் கல்வித்தகுதி மற்றும் உச்சவரம்பு கிடையாது. தொழில் திட்டத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வரையிலான பொதுப்பிரிவினரும், 18 முதல் 55 வயது வரையிலான சிறப்பு பிரிவினரும் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபாரம் தொழில் செய்து பயன் பெறலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதி திட்டத்தின்கீழ் விலக்கு அளிக்கப்படுகிறார்கள். திட்டமதிப்பீட்டில் பொதுபிரிவினர் 10 சதவீதமும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர். சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதம் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். இத்திட்டத்தின்கீழ் வியாபாரம் தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் கடன் பெறலாம். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். தஞ்சாவூரில், வேளாண்சார், கடல்சார் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கவும் இத்திட்டத்தின்கீழ் முன்மொழியும் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்திற்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

மேலும், இது தொடர்பாக விவரங்களைப் பெற கீழ்க்காணும் மாவட்ட தொழில் மைய அலுவலர்களான பொதுமேலாளர் 9788877322, உதவி பொறியாளர் 8903542269, புள்ளி விவர ஆய்வாளர் 9842827835, இவர்களை தொடர்பு கொண்டும் நாஞ்சிக்கோட்டை ரோடு, உழவர் சந்தை அருகில், மாவட்ட தொழில் மையம், போன் நம்பர், 04362-255318, தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரில் அணுகியும் விவரங்கள் பெற்று பயனடையலாம். இவ்வாறு மாவட்ட அவர் தெரிவித்துள்ளார்.

The post உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 தொடர்பாக தஞ்சாவூரில் ரூ.1000 கோடி ஈர்க்க இலக்கு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...