
புதுக்கோட்டை,செப்.22: புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் புகுந்தனர். பெண்ணின் உறவினர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காதல் கணவனுடன் இளம்பெண் மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள மேலமடாவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (21). இவர் பி.இ படித்துள்ளார்.
இந்நிலையில் இவரும் ஆவுடையார்கோயவில் அருகே உள்ள மேல 2ம் வீதியை சேர்ந்த ருத்ரமூர்த்தி (22) என்ற இளைஞரும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இவர்கள் காதல் விவகாரம் ஆர்த்தியின் பெற்றோருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவசர அவசரமாக ஆர்த்திக்கு வேறு மாப்பிள்ளையை அவரது பெற்றோர் பார்த்து வந்துள்ளனர்.
இதனால் ஆர்த்தி கடந்த 16ம் தேதி அவரது வீட்டை விட்டு வெளியேறி ருத்ரமூர்த்தியுடன் சென்றுள்ளார். பின்னர் கடந்த 17ம் தேதி புதுக்கோட்டை அடுத்த குமாரமலையில் உள்ள முருகன் கோயிலில் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டது. ஆர்த்தியின் உறவினரானகளுக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து நேற்று புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஆர்த்தி மற்றும் அவர் காதல் திருமணம் செய்து கொண்ட கணவர் ருத்ரமூர்த்தியுடன் தஞ்சமடைந்து மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டேவை சந்தித்து தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் அதனால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தார்.
இதனையடுத்து மனுவை பெற்ற மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே காதல் திருமணம் செய்து கொண்ட ஆர்த்தி மற்றும் ருத்ரமூர்த்திக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும், மேலும் புகார் மனுவை ஆவுடையார்கோவில் காவல் நிலையத்திற்கு அனுப்புவதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.