×

ஆலத்தூரில் வளர்ச்சித்திட்ட பணிகள் ஆய்வு

பாடாலூர், செப் 21: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் (பொ) மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் கலெக்டர் கற்பகம் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் நீர்வழித்தடங்கள் தூர்வாரும் பணிகளை பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன் மற்றும் சம்மந்தப்பட்ட பகுதிகளின் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

The post ஆலத்தூரில் வளர்ச்சித்திட்ட பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Alatur. Padalur ,Tamil ,Nadu ,Aladhur ,Perambalur ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...