×

3 ஒன்றியங்களில் வளர்ச்சித்திட்டப்பணிகள் ஆய்வு

பெரம்பலூர், செப். 21: பெரம்பலூர் துறைமங்கலத்தில் திமுக இளைஞர் அணி புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆனந்த குமார் கலந்து கொண்டு, இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர்கள் சேர்த்தல் முகாமை துவக்கி வைத்தார். அதேபோல் குரும்பலூர், வேப்பந் தட்டை, கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் முகாம் நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், பரமேஷ் குமார், பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப் பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவசங்கர், தங்க.கமல், சுப்ரமணியன், அருண், பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜ்குமார், ஜெக தீசன், நல்லதம்பி, மதிய ழகன், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post 3 ஒன்றியங்களில் வளர்ச்சித்திட்டப்பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,DMK ,Perambalur District… ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை...