×

நீட் மோசடியான தகுதி தேர்வு

நாகப்பட்டினம், செப்.22: நீட் தேர்வு மோசடியான தகுதி தேர்வு என முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஒன்றிய அரசால் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக இருந்தாலும் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்திருக்கிறது. மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு தான் தகுதி என்று என பாஜக அரசு வரட்டு பிடிவாதம் இருந்து வரும் நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவித்திருப்பதன் மூலம் நீட் முடிவு தேர்வு வெறும் கண்துடைப்பு என வெளிப்படையாக தெரிகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை தகுதியாக ஏற்றுக்கொள்ளாமல், நீட் கட்டாயம் என்று கூறும் ஒன்றிய அரசு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதி இருந்தால் மட்டும் போதும் மதிப்பெண் அளவீடு எதுவும் தேவையில்லை என அறிவித்துள்ளதன் மூலம் மருத்துவக் கல்விக்கு நீட் என்பது ஒரு மோசடியான தகுதித் தேர்வு என்பது தெரிகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post நீட் மோசடியான தகுதி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,MLA ,Nizamuddin ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் எவ்வளவு...