×

தேனி அருகே டூவீலர் விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் காயம்

ஆண்டிபட்டி, செப். 22: தேனி அருகே டெம்புச்சேரி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ்(52). இவருடைய மனைவி ஜானகி(46). கடந்த 19ம் தேதி சொந்த வேலையின் காரணமாக அவருடைய டூவீலரில் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி, மூன்று வயது பேரன் ஆகிய மூவரும் டூவீலரில் உப்புக்கோட்டை பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் டூவீலரில் வந்த உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆண்டிராஜ் என்பவரின் மகன் கோடீஸ்வரன்(24), தங்கராஜ் ஓட்டி சென்ற டூவீலரில் பின் பகுதியில் மோதியதால் கீழே விழுந்து தங்கராஜ், ஜானகி மற்றும் அவரது மூன்று வயது பேரன் ஆகிய மூவரும் காயமடைந்தனர். மூவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post தேனி அருகே டூவீலர் விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Antipatti ,Thangaraj ,Tembucheri ,Janaki ,Dinakaran ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?