×

தேனியில் பெண் தூக்கிட்டு தற்கொலை

 

ஆண்டிபட்டி, செப். 22: தேனியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி அருகே பொம்மயகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி வேணி(25). இவர்களுடைய 5 வயது மகள் கடந்த 17ம் தேதி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நாகராஜ் மற்றும் அவருடைய மனைவி வேணி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 19ம் தேதி பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த வேணி அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேணியின் தந்தை பாண்டியன் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post தேனியில் பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Theni ,Antipatti ,
× RELATED தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே புக்கிங்...