×

பரமக்குடி அருகே மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: எம்எல்ஏ வழங்கினார்

 

பரமக்குடி, செப். 22: பரமக்குடி அருகே பொட்டகவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ முருகேசன் வழங்கினார்.
பரமக்குடியை அடுத்த நயினார்கோவில் அருகே பொட்டகவயல் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆன்டோ கில்டா வரவேற்றார்.

பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலைல்லா மிதிவண்டிகளை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் வழங்கினார். இந்த நிகழ்ச்யில் நயினார்கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாமலை, பொட்டகவயல் ஊராட்சி மன்ற தலைவர் ஹக்கீம், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் மீரா முகைதீன், ஒன்றிய துணைச் செயலாளர் திலகர், மாவட்ட பிரதிநிதி நவாஸ் தான், மணக்குடி கந்தசாமி, துரை மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post பரமக்குடி அருகே மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Paramakudi ,Pothagawayal Government Higher School ,
× RELATED சிறுதானியங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்