×

அம்மாள்தோப்பு துவக்க பள்ளிக்கு சொந்தநிதியில் டெஸ்க், பெஞ்சுகள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்

ஏரல், செப்.22: அம்மாள்தோப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு தனது சொந்த நிதியில் இருந்து வாங்கப்பட்ட டெஸ்க், பெஞ்சுகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார். ஏரல் அருகே அம்மாள்தோப்பில் செயல்படும் யூனியன் துவக்கப் பள்ளியில் கடந்த ஜூலையில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம், மாணவ- மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக டெஸ்க், பெஞ்சு உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கித்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான டெஸ்க், பெஞ்சு உள்ளிட்ட உபகரணங்களை பள்ளிக்கு வாங்கிக் கொடுத்தார். ஏரல் பேரூர் திமுக செயலாளர் ராயப்பன், வைகுண்டம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயராஜ் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வாசுகி வரவேற்றார். இதில் வைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், மாநில ஊடகப் பிரிவு முத்துமணி, வை மத்திய வட்டாரத் தலைவர் ஜெயசீலன், காங்கிரஸ் நிர்வாகிகள் அந்தோனிகாந்தி, காமராஜ்காந்தி, திமுக ஒன்றிய இளைஞரணி ராஜவேல், அம்மாள்தோப்பு ஊர் தலைவர் முத்துராஜ், கொற்கை பஞ். தலைவர் முருகேசன், ஆசிரியை செல்வமணி, ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி மற்றும் ஊர் மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post அம்மாள்தோப்பு துவக்க பள்ளிக்கு சொந்தநிதியில் டெஸ்க், பெஞ்சுகள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Urvashi Amritraj MLA ,Ammalthop Primary School ,Eral ,Urvashi ,Ammalthop Panchayat Union Primary School ,Dinakaran ,
× RELATED பண்ணைவிளையில் உபவாச ஜெபக்கூட்டம்