
- Markandeyan
- சட்டமன்ற உறுப்பினர்
- கீழ்
- ஈரல் ஆரோக்கியம்
- மையம்
- எட்டயபுரம்
- கீழ் ஏரல் ஆரம்ப சுகாதார நிலையம்
- ஏரல்
- சுகாதார நிலையம்
- தின மலர்
எட்டயபுரம், செப். 22: எட்டயபுரம் அருகே கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.56.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
தலைமை வகித்த மார்க்கண்டேயன் எம்எல்ஏ, அடிக்கல் நாட்டி புதிய கட்டிடத்திற்கான கட்டுமானப் பணியைத் துவக்கிவைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி, கோவில்பட்டி பிடிஓ ராஜேஷ்குமார், திமுக கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் நவநீதகண்ணன், கீழ ஈரால் பஞ். தலைவர் பச்சைப்பாண்டி, யூனியன் கவுன்சிலர் சுமதி இமானுவேல், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயமுத்து, கிளைச் செயலாளர் சண்முகவேல், இளைஞர் அணி மகேந்திரன், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
The post கீழ ஈரால் சுகாதார நிலையத்தில் ரூ.56.40 லட்சத்தில் புதிய கட்டிடம் மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல்நாட்டினார் appeared first on Dinakaran.